தமிழ்நாடு
சீமான் குற்றவாளி என சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரம்- தி.பெ.க. தலைவர் மீது நாம் தமிழர் கட்சி சார்பில் புகார்
- சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
- நடவடிக்கை எடுக்க தவறினால் காவல்துறையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஐயனார் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தவறாக சித்தரித்து, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது 'குற்றவாளி' என்றும் சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் 'சுவரொட்டி அடித்து ஒட்டிய' திராவிடர் பெரியார் கழக தலைவர் மா.பா.மணி அமுதன் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட வேண்டும் என்றும், தாங்கள் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் காவல்துறையை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.