அனுமதியின்றி போராட்டம்- தமிழிசை சவுந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட 417 பேர் மீது வழக்கு
- கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
- பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவின் கீழ் 417 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜனதாவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்ட களத்திற்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை போராட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை என கூறி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பா.ஜ.க. நிர்வாகி தமிழிசை, கரு.நாகராஜன் உள்ளிட்ட 417 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவின் கீழ் 417 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.