தமிழ்நாடு

தேசிய உழவர்களில் நாளில் உழவர்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்! ராமதாஸ்

Published On 2024-12-23 07:13 GMT   |   Update On 2024-12-23 07:13 GMT
  • உழவர்களின் ஒப்பற்றத் தலைவர் என்றால் அது சவுத்ரி சரண்சிங் தான்.
  • மூன்று முத்தான சட்டங்களைக் கொண்டு வந்தவர்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,

உழவர்களின் நலனுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சவுத்ரி சரண்சிங்கின் பிறந்தநாளான இன்று தேசிய உழவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள உழவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவர்களின் ஒப்பற்றத் தலைவர் என்றால் அது சவுத்ரி சரண்சிங் தான். உத்தரப்பிரதேச அமைச்சர், உத்தரப்பிரதேச முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர், துணைப் பிரதமர், பிரதமர் என ஏராளமான பதவிகளை வகித்த போதும் கடைசி வரை உழவர்களை மறக்கவில்லை. அவர் உழவர்களுக்காகவே வாழ்ந்தவர்; உழைத்தவர். உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த போது, 1) கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து உழவர்களை மீட்க, கடன் மீட்பு சட்டம், 2) உழுபவர்களுக்கே நிலத்தை சொந்தமாக்கும் சட்டம், 3) ஜாமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் ஆகிய மூன்று முத்தான சட்டங்களைக் கொண்டு வந்தவர். அந்த சட்டங்கள் தான் உழவர்களை அழிவிலிருந்து மீட்டன.

உழவர்களின் நலனுக்காக சரண்சிங்கிற்கு பல கனவுகள் இருந்தன. அந்தக் கனவுகளை நனவாக்குவதற்காக போராடுவதற்கு இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம் என கூறியுள்ளார். 

Tags:    

Similar News