தமிழ்நாடு
மெரினாவில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
- நமது குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
- முப்படை வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெறுகிறது.
நமது குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவிருக்கிறது.
இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் ஒத்திகை காரணமாக 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. முப்படை வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெறுகிறது.