பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
- வடகிழக்கு மாநில பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்புகின்றனர்.
- அப்படி அனுப்பும்போது அவர்கள் தமிழ்நாட்டை பாதுகாப்பாக உணர்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து அவர் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உணர்கின்றனர்.
இதனால் தமிழ்நாட்டுக்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை.
பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலத்தவர், தமிழ்நாட்டை பாதுகாப்பானதாக கருதுகின்றனர் என தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கவர்னர் ரவி புகழ்ந்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.