தமிழ்நாடு
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-தி.மு.க. சங்கடங்களை சரி செய்ய காங்கிரஸ் முயற்சிக்கும்: செல்வப்பெருந்தகை உறுதி
- இந்தியா கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 2026 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும்.
- எல்லோரும் ஒற்றுமையாக அமர்ந்து பேசுவோம்.
சென்னை:
தி.மு.க.-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை கூட்டணி கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது:-
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூத்த அரசியல் தலைவர். மிக நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்தவர். தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒன்று இந்தியா கூட்டணி எந்த கட்டத்திலும் மாறுபட்டு போக இடம் அளிக்க கூடாது. அதற்கு காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்.
இந்தியா கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 2026 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும். இரு கட்சிகளிடையேயும் மனமாச்சரியங்கள், சங்கடங்கள் இருந்தால் அது களையப்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக அமர்ந்து பேசுவோம். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.