இந்தியா கூட்டணிக்கு வருவதுதான் விஜய்க்கு நல்லது - செல்வப்பெருந்தகை
- தனது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக விஜய் உரையாற்றி இருந்தார்
- விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவதுதான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை, கோட்பாடுகளுக்கும் நல்லது.
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 86-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் மட்டுமில்லை தென்னிந்தியாவில்லை, இந்தியாவிலேயே கால்பதிக்க விடக்கூடாது என்று போராடிய மாபெரும் தலைவர் வாழப்பாடியார். அவரது குரல் ஏழை எளிய மக்களின் குரலாக, இந்த தேசத்தில் வாழ்கின்ற கோடானு கோடி மக்களின் குரலாக இருந்தது. அப்படிப்பட்ட குரலுக்கு சொந்தக்காரர். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.
* தனது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக விஜய் உரையாற்றி இருந்தார்.
* எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஓரங்கட்டி விடலாம். ஆனால் இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என விஜய் முடிவெடுத்தால் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் நல்லது.
* விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவதுதான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை, கோட்பாடுகளுக்கும் நல்லது. எல்லோருக்கும் நல்லது. இதைத்தான் யதார்த்தமாக ஒரு இந்திய பிரஜையாக சொல்கிறேன் என்றார்.