தமிழ்நாடு

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி- த.வெ.க தலைவர் விஜய்

Published On 2025-03-07 19:12 IST   |   Update On 2025-03-07 19:15:00 IST
  • நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.
  • நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.

வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.

அங்கு, இஸ்லாமிய தலைவர்கள் விஜய்யை வரவேற்றனர். பிறகு, நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விஜய் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் அமர்ந்தனர்.

பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.

நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

இதைதொடர்ந்து, விஜய் இஸ்லாமிய மக்கள் முன்பு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், " மாமனிதர் நபிகள்நாயகம் அவர்களின் வழியை, மனிதநேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்.

எங்களது அழைப்பை ஏற்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு வந்த இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

ராயப்பேட்டையில் திரண்டுள்ள தவெக தொண்டர்கள், ரசிகர்களை நோக்கி கை அசைத்து சந்தித்தபடி விஜய் புறப்பட்டுச் சென்றார்.

Tags:    

Similar News