தமிழ்நாடு
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து
- வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று புறநகர் ரெயில் சேவை ரத்து.
- தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.