தமிழ்நாடு
பாஜகவால்தான் தோற்றோம் என்றவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்- அண்ணாமலை
- பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
- எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.
பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.