தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2025-03-14 10:42 IST   |   Update On 2025-03-14 10:54:00 IST
  • 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.160 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
  • 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மத்திய அரசு நிதி தராவிடினும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதால் மாநில அரசின் நிதி செலவிடப்படுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும் பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-

* மாணவர்கள் வருகை, ஊட்டச்சத்து, கற்றல் திறன் மேம்பட்டுள்ளது.

* நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவு செய்யப்படும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

* அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

* உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பி எடுக்கும் பாடங்களில் கூடுதலாக 15000 இடங்கள்.

* 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.160 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

* 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

* திறன்மிகு வகுப்பறைகள் நவீன ஆய்வகங்களை உருவாக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.

* பழங்குடியின மாணவர்கள் பயனடையும் வகையில் மலைப்பகுதிகளில் உள்ள 14 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

* அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ரூ.500 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். 

Tags:    

Similar News