தமிழ்நாடு
வேலைநிறுத்தம் கூடாது - அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு
- அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.
- எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.
தமிழக அரசின் ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
* அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.
* அரசு ஊழியர்கள் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது.
* அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.
* அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது.
* வேலைநிறுத்தத்தை தூண்டும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
* எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.
* சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.