தமிழ்நாடு

பல்லாவரம்-குன்றத்தூர் சாலை 4 வழிச்சாலையாக மாறுவது எப்போது?- இ.கருணாநிதி எம்.எல்.ஏ. கேள்வி

Published On 2025-03-17 14:47 IST   |   Update On 2025-03-17 14:47:00 IST
  • 14 வீடுகளுக்கு ஏற்கனவே நஷ்டஈடு வழங்கப்பட்டு விட்டது.
  • நில எடுப்பு செய்யும்போது கோடிக்கணக்கில் நஷ்ட ஈட்டுக்கு பணம் ஒதுக்க வேண்டும்.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்வி கேட்கையில், பல்லாவரம் தொகுதி 8 லட்சம் மக்கள்தொகை கொண்டது. பல்லாவரத்தில் இருந்து பம்மல் அனகாபுத்தூர் குன்றத்தூர் சாலை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு, ஏற்கனவே அமைச்சர் கூறி இருந்தார்.

அங்கு 14 வீடுகளுக்கு ஏற்கனவே நஷ்டஈடு வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 200 வீடுகளுக்கு தான் நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த தொகையை இந்த ஆண்டே நிதி ஒதுக்கி , இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படுமா என அறிய விரும்புகிறேன் என்றார். இதற்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலளிக்கையில், பல்லாவரம் குன்றத்தூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தினால் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். ஆனால் பல்லாவரம் வர்த்தகர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இங்கு நில எடுப்பு செய்யும்போது கோடிக்கணக்கில் நஷ்ட ஈட்டுக்கு பணம் ஒதுக்க வேண்டும். பல்லாவரம் தொகுதியை பற்றி முதலமைச்சரும் அறிவார்.

எனவே நிதித்துறையில் கலந்து ஆலோசித்து இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அரசு ஆவண செய்யும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Tags:    

Similar News