செல்லுமிடமெல்லாம் மக்கள் முகங்களில் வெளிப்படும் மகிழ்ச்சியே விடியல் ஆட்சி: சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம்
- மாணவிகள் என்னை அப்பா, அப்பா என அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
- திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எது விடியல் ஆட்சி என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம்.
* பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். காலை உணவு திட்டத்தால் தெம்பாக படிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
* புதுமைப்பெண், மகளிர் விடியல் பயணம் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் அன்போடு என்னை அப்பா அப்பா என்று அழைக்கின்றனர். மாணவிகள் என்னை அப்பா, அப்பா என அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
* விடியல் ஆட்சியாக நாங்கள் சொன்னது மக்களுக்கு விடியல் ஆட்சி, மக்களுக்கு எதிரானவர்களுக்கு விடியலல்ல.
* நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் முகங்களில் வெளிப்படும் மகிழ்ச்சியே விடியல் ஆட்சிக்கான சாட்சி.
* அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டால் எதிர்க்கட்சியினர் அதிகம் வேதனை அடைவர்.
* திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது.
* தமிழ்நாட்டில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமையும்.
* விடியல் எங்கே என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் இது விடியல் ஆட்சி என்பதற்கு மக்களின் ஆதரவு தான் சாட்சி என்று அவர் கூறினார்.