செய்திகள்

டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8: விலை, வெளியீட்டு தேதி

Published On 2017-06-24 21:04 IST   |   Update On 2017-06-24 21:04:00 IST
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி ட்விட்டரில் கசிந்துள்ளது.
சீயோல்:

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் நடைபெறும் சாம்சங் பிரத்தியேக விழாவில் அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்றும் இதன் விலை 999 யூரோ அதாவது 1118 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.72,018 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 விலை 849 யூரோ என நிர்ணயம் செய்யப்பட்டது.  


மேலும் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் AMOLED 1440x2960 பிக்சல் டிஸ்ப்ளே, 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக இருக்கும் கேலக்ஸி நோட் 8 மேம்படுத்தப்பட்ட ஸ்ப்லிட்-ஸ்கிரீன் அம்சம், எஸ் பென் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைரேகை ஸ்கேனர் சரியாக பிளாஷ் லைட் மற்றும் இதய துடிப்பு சென்சார்களுக்கிடையே பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 

கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் புதிய S8 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் டெக்ஸ் வசதியும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News