உலகம்

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படை தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி

Published On 2025-02-07 23:50 IST   |   Update On 2025-02-07 23:50:00 IST
  • பாகிஸ்தானில் பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தியது.
  • இந்தத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பெஷாவர்:

பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு பாதுகாப்புப் படையினர் சென்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News