உலகம்
2025 ஜனவரியில் 120 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் செயலிழந்து விண்வெளியில் இருந்து கீழே விழுந்தன
- ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
- தினமும் 4 முதல் 5 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து வருகின்றன.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய தள வசதியை வழங்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் ஒரு குறிப்பட்ட தொலைவில் நிலைநிறுத்தப்படும். ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து தீப்பற்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் நான்கு முதல் ஐந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எறிந்துவிடுவதாக வானியலாளர் ஜொனாதன் மெக்டோவல் பதிவிட்டுள்ளார்.