உலகம்

இந்தியாவுடன் அனைத்து பிரச்சனைகளையும் பேசித்தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம் - பாக்., பிரதமர்

Published On 2025-02-06 11:25 IST   |   Update On 2025-02-06 11:31:00 IST
  • ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாக இந்தியா மீது ஷெரீப் குற்றம்சாட்டினார்.
  • ஆயுதங்களை சேமித்து வைப்பது அமைதியைக் கொண்டுவராது என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக முசாபராபாத்தில் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தின் போது பாகிஸ்தன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

காஷ்மீரிகளுக்கு ஆதரவைக் காட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஆகஸ்ட் 5, 2019 அன்றைய சிந்தனையிலிருந்து இந்தியா வெளியே வந்து, ஐ.நா.விற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான் என்றார்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும், ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாக இந்தியா மீது ஷெரீப் குற்றம்சாட்டினார். மேலும் ஆயுதங்களை சேமித்து வைப்பது அமைதியைக் கொண்டுவராது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும், வன்முறையில் ஈடுபடும் குழுக்களை ஆதரிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்தியாவின் அணுகுமுறை அமைதியை மையமாகக் கொண்டுள்ளது. இப்போதைக்கு, இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியான சூழலை உருவாக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று இந்தியா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News