உலகம்

DeepSeek சி.இ.ஓ. என பரவிய வேறு ஒருவரின் புகைப்படம் - ஒரே பெயரால் நேர்ந்த குழப்பம்

Published On 2025-02-06 11:36 IST   |   Update On 2025-02-06 11:36:00 IST
  • சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது.
  • சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சாட்ஜிபிடி ஏஐ உலகளவில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது. மற்றவற்றைக்காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இதனால் உலகளவில் சாட்ஜிபிடி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ மாடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தது. பிரீமியம் முறையில் சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் தலைவலியாக மாறியுள்ளது.

இதனிடையே டீப் சீக் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. லியாங் வென்ஃபெங் என்று ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அப்புகைப்படம் டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் புகைப்படம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

சீன கட்டுமான பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநர் லியாங் வென்ஃபெங் புகைப்படத்தை டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ. என தவறாக பரப்பியுள்ளனர்.

டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் பெயரும் லியாங் வென்ஃபெங் என்று இருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். டீப் சீக் ஏஐ வெளிவரும் வரை லியாங் வென்ஃபெங் தனது ப்ரோபைலில் தன்னை பற்றிய போதுமான விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. டீப் சீக் ஏஐ வெளிவந்தவுடன் இது தொடர்பாக கடந்த வாரம் அவர் பேசியபோது தான் பலருக்கும் அவரை பற்றி தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News