செய்திகள்
அரசின் முடிவை எதிர்த்து சுவிட்சர்லாந்து மக்கள் வாக்களித்த காட்சி

வேலை பார்க்கா விட்டால் சம்பளம் வேண்டாம்: கருத்து வாக்கெடுப்பில் சுவிஸ் மக்கள் மறுப்பு

Published On 2016-06-06 12:25 IST   |   Update On 2016-06-06 12:25:00 IST
வேலை பார்க்காவிட்டால் சம்பளம் வேண்டாம் என கருத்து வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஜுரிச்:

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மக்களுக்கு அவர்கள் வேலை செய்தாலும், வேலை செய்யாவிட்டாலும் அடிப்படை மாதாந்திர சம்பளம் ஒரு தொகை வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாத ஊதியமாக 2,555 டாலர் (இந்திய மதிப்பளவு சுமார் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம்) வழங்க முன் மொழியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மாதம் 625 டாலர் (ரூ. 42 ஆயிரம்) வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மக்களிடம் இருக்கும் வரவேற்பு குறித்து அறிய கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், வேலை செய்யாமல் சம்பளம் வழங்க 76.9 சதவீத பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர். 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்திட்டத்தை அறிமுகம் செய்தால் செய்கிற வேலைக்கும் பெறுகிற சம்பளத்துக்கும் தொடர்பு இல்லாமல், போய்விடும். அதனால் சமூக கேடுகளை விளைவிக்கும் என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Similar News