செய்திகள்

மாற்று உறுப்பு ஆபரேசனுக்காக மனித உறுப்புகளை பன்றிக்குள் வளர்க்கும் விஞ்ஞானிகள்

Published On 2016-06-06 13:46 IST   |   Update On 2016-06-06 13:46:00 IST
மாற்று உறுப்பு ஆபரேசனுக்காக மனித உடல் உறுப்புகளை பன்றிக்குள் விஞ்ஞானிகள் வளர்க்கின்றனர்.
நியூயார்க்:

உடல்நலக்குறைவு காரணமாகவும், விபத்துக்களிலும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாலும் மனிதர்கள் உறுப்புகள் செயல் இழக்கின்றன. அதனால் உயிர் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே மற்றொரு மனிதரின் உடலில் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று ஆபரேசன் மூலம் பொருத்தப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் உறுப்புகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் பலரது உயிர் பறிபோகிறது.

அதை தடுக்க விஞ்ஞானிகள் உடலுக்கு வெளியே அதாவது ஆய்வகங்களில் மனித உடல் உறுப்புகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள் ஒருபடிக்கு மேலே சென்று பன்றிகளின் உடலுக்குள் மனித உறுப்புகளை உருவாக்கும் ஆய்வு மேற்கொண்டுள்னர்.

பெண் பன்றி கருமுட்டைக்குள் மனித ‘ஸ்டெம் செல்’ களை செலுத்தி மனிதன்-பன்றி கருமுட்டையாக்குகின்றனர். அதற்கு ‘சிமெராஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவை பெண் பன்றிகளின் வயிற்றில் கர்ப்பம் தரிப்பதற்கு 28 நாட்களுக்கு முன்புவரை வளர விடப்படுகிறது. அதன்பின்னர் அவை வெளியேற்றப்பட்டு திசுக்கள் பரிசோதிக்கப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியில் கலிபோர்னியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுவான பன்றி செல்களின் இடையே மனிதனின் செல்களும் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. எனவே இந்த ஆய்வை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News