செய்திகள்
சுவிட்சர்லாந்து பயணத்தை தொடர்ந்து அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
5 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் அமெரிக்கா சென்றடைந்தார்.
வாஷிங்டன்:
சுவிட்சர்லாந்து பயணத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றடைந்தார். மூன்று நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பிரதமர் ஆன பின் மோடி அமெரிக்கா செல்வது இது நான்காம் முறை.
நாளை(8ஆம் தேதி) அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார்.
தன்னுடைய பதவி காலாம் முடிவதை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா நெருங்கிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
முன்னதாக, தனது 5 நாடுகள் பயணத்தில் ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.