செய்திகள்

தென்சீன கடலில் கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி கண்டுபிடிப்பு

Published On 2016-07-23 11:07 IST   |   Update On 2016-07-23 11:07:00 IST
பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்:

பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய தீவுகளை சீனா, வியட்நாம், தைவான் உள்ளிட்ட நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன.

இதற்கிடையே தென்சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாட முடியாது என ஐ.நா.வின் சர்வதேச கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதை ஏற்க மறுக்கும் சீனா அக்கடல் பகுதி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தென்சீன கடலில் பிரச்சினைக்குரிய பாரசல் தீவுகள் பகுதியில் கடலுக்கு அடியில் 300.89 மீட்டர் ஆழ புதைகுழி இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவே கடலுக்கு அடியில் உள்ள உலகின் மிக ஆழமான புதைகுழி என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதை குழியை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Similar News