செய்திகள்

சீனாவில் கனமழைக்கு 87 பேர் பலி: லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Published On 2016-07-23 12:37 IST   |   Update On 2016-07-23 14:40:00 IST
சீனாவில் பெய்துவரும் கோடை மழைக்கு 87 பேர் பலியாகினர். ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பீஜிங்:

சீனாவில் கடந்த ஒருவாரமாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மத்திய சீனாவில் உள்ள ஹென்னான் மாகாணத்தில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 15 பேர் பலியாகினர், இம்மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு கருதி 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஹேபேய் மாகாணத்தில் மட்டும் மழைசார்ந்த விபத்துகளில் 72 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 90 லட்சம் பேர் பாதுகாப்பு கருதி வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Similar News