செய்திகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே முதியோர் இல்லம் ஒன்றில் கத்தி குத்து தாக்குதல்: 19 பேர் பலி

Published On 2016-07-26 04:30 IST   |   Update On 2016-07-26 04:30:00 IST
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
டோக்கியோ:

ஜப்பான் நாட்டில் கனகவா மாகாணத்தில் உள்ள சகமிஹரா நகரில் முதியோர் இல்லம் ஒன்றில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்றது மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் என்றும் கூறப்படுகிறது.

இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து இல்லத்தின் நிர்வாகி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அப்போது, 20 வயதுமிக்க வாலிபர் ஒருவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அதிகாலை 3.00 மணியளவில் அந்த வாலிபர் தானாகவே கனகவா மாகாண போலீசாரிடம் சரணடைந்தார். அந்த நபர் தாக்குதலுக்கு உள்ளான இல்லத்தின் முன்னாள் பணியாளர் என்று கூறப்படுகிறது.

Similar News