செய்திகள்

மியான்மர்: இசைக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலி

Published On 2017-04-04 01:23 IST   |   Update On 2017-04-04 01:23:00 IST
மியான்மர் நாட்டில் இசைக்கூடத்தில் உள்ள கருவிகளில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உள்பட 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
நைபிடா:

மியான்மர் நாட்டில் இசைக்கூடத்தில் உள்ள கருவிகளில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உள்பட 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மியான்மர் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மாக்வே நகரில் ஒரு தனியார் கட்டிடத்தில் இசைக்கூடம் செயல்பட்டு வருகின்றது. நேற்று அங்கு வழக்கமான பணிகள் நடைபெற்று வரும் போது இசைக் கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மின்சாதனங்களில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது.

தீ விபத்து காரணமாக அறையில் கரும்புகை நிலவியதால் அங்கிருந்தவர்கள் அனைவரும் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கிருந்து யாரும் தப்பிக்கமுடியாமல் போனது. இந்த கோர விபத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 15 பேர் உடல் கருகி பலியானார்கள். விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து பலியானவர்களின் உடல்களை பரிசோதனக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அந்த கட்டிடத்தின் உரிமையாளரை கைது செய்தனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததாலே தீ விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News