செய்திகள்
கென்யா அதிபர் தேர்தலில் மோசடி நடத்துள்ளது - எதிர்கட்சி தலைவர் உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கென்யா அதிபர் தேர்தலில் மோசடி செய்து அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அவர் எதிர்த்து போட்டியிட்ட ஒடிங்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நைரோபி:
கென்யா அதிபர் தேர்தலில் மோசடி செய்து அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அவர் எதிர்த்து போட்டியிட்ட ஒடிங்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உகுரு கென்யட்டா அதிபராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிபர் கென்யட்டா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் ரெய்லா ஒடிங்கா களம் இறங்கினார்.
இதையடுத்து, நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சி வேட்பாளர் ஒடிங்கா ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறினார். அதை தொடர்ந்து கென்யா தலைநகர் நைரோபி, கிசுமு, கிபேரா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் மூண்டது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஒடிங்கா இன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தலில் அதிபர் வென்றதாக வெளியான முடிவுகள் பொய் எனவும் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால், மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.