செய்திகள்
இந்திய பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், சுதிப் டத்தா பவுமிக் உட்பட 18 பேருக்கு பாராட்டு விழா
பத்திரிகை துறையில் சிறப்பாக செயலாற்றி, கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக வாஷிங்டனின் பாராட்டு விழா நடத்தப்பட்டது. #Newseum
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் புகழ்பெற்ற நியூசியம் உள்ளது. இந்த அருங்காட்சியகமானது பத்திரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. பத்திரிக்கை துறைக்காக உயிரை விட்ட சில பத்திரிக்கையாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுவர்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பத்திரிகையாளர்களில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் தனது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர் ஜாதி போன்ற அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுதிப் டத்தா பவுமிக் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஊழலுக்கு எதிராக போராடி வந்தார்.
18 பத்திரிக்கையாளர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். மேலும், பத்திரிகையாளர்கள், எடிட்டர், போட்டோகிராபர் மற்றும் பிராட்காஸ்டர்ஸ் போன்ற பிரிவுகளில் பணிபுரிந்து உயிரை விட்ட 2,323 பேருக்கு நினைவு கண்ணாடி பேனல் வைக்கப்பட்டது. அதில் 80 பேர் இந்திய பத்திரிகையாளர் ஆவர். #Newseum