உலகம்
7-வது முறையாக வடகொரியா இன்றும் ஏவுகணை சோதனை
ஜப்பானையொட்டி உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏவுகணை சோதனையை தீவரப்படுத்தி வருகிறது. இந்த மாதத்தில் நேற்று வரை 6 முறை ஏவுகணை சோதனை நடத்தி இருந்தது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்றும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி இருக்கிறது. ஜப்பானையொட்டி உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.