பாகிஸ்தான்: கைபர் பகதுன்க்வா மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்- 5 பேர் பலி
- ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார்.
- கைபர் பகதுன்க்வா முதல்வர் மற்றும் கவர்னர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பகதுன்க்வாவில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார். ஹமிதுல் ஹக் ஹக்கானி 1968-ம் ஆண்டு, அவரது தந்தை உயிரிழந்த நிலையில் ஜே.யு.ஐ. அமைப்பின் தலைவர் ஆனார்.
இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கும் என கைபர் பகதுன்க்வா ஐ.ஜி. தெரிவித்துள்ளார். ஹமிதுல் ஹக்கை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கைபர் பகதுன்க்வா முதல்வர் மற்றும் கவர்னர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.