பிலிப்பைன்சில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 8 பேர் உயிரிழப்பு
- 3 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- 2-வது மாடியில் வசித்து வந்தவர்களில் 2 பேரும், 3 மாடியவில் வசித்து வந்தவர்களில் 6 பேரும் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர் பகுதியான குயிசன் நகரில் உள்ள சான் இசிட்ரோ கலாஸ் கிராமத்தில் இன்று அதிகாலை 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பயங்கர தீ விபத்தில் முதல் தளத்தில் வசித்து வந்த 2 பேரும், 2-வது தளத்தில் வசித்து வந்த 6 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கோடைக்காலம் தொடங்குவை முன்னிட்டு மார்ச் மாதம் அரசு தீ விபத்தை தடுப்பது குறித்து வழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மார்ச் மாதம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாதது, அதிக மக்கள் கூட்டம், ஒழுங்கற்ற கட்டட வடிவமைப்பு ஆகியவை அடிக்கடி தீ விபத்து ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது.
குயிசனில் கடந்த 1996-ம் ஆண்டு இரவு விடுதியில் நடைபெற்ற தீ விபத்தில் 162 பேர் உயிரிழந்தனர். பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்ததையொட்டி ஏராளமான மாணவர்கள் விடுதிக்கு சென்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மிகவும் கொடூரமான தீ விபத்தாக கருதப்படுகிறது.