உலகம்

சூடான்: ராணுவ விமானம் மோதி பயங்கர விபத்து - பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழப்பு

Published On 2025-02-26 15:04 IST   |   Update On 2025-02-26 15:04:00 IST
  • ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி விபத்துள்ளது.
  • நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது.

சூடானில் ராணுவ விமான விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (செவ்வாய்க்கிழமை) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது.

ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து விபத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதில் விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் வீடு உள்ள பகுதியிலிருந்த பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற படைகளுக்கும், ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது. 

Tags:    

Similar News