உலகம்

null
ஆஸ்திரியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களை குறிவைத்து பணமோசடி- 15 பேர் கைது
- போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
- கும்பலைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
வியன்னா:
ஆஸ்திரியாவின் ஸ்டைரியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு சமூகவலைதளம் மூலம் ஒருவர் அறிமுகமானார். நட்பாக பழகிய அந்த நபரை சந்திக்க வாலிபர் சென்றிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் அவரை தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதில் அந்த கும்பல் சமூகவலைதளம் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை குறிவைத்து பழகியதும், பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து பணமோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.