வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்த கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்திய பெண் டெலிவரி ஊழியர்
- மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
- மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தியால் அல்வேலா கத்தியால் குத்தினார்.
டெலிவரி செய்த பீட்சாவுக்கு வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்ததால் கர்பிணி பெண்ணை, பெண் டெலிவரி ஊழியர் 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பெண் ப்ரியானா அல்வெலோ. பீட்சா டெலிவரி ஊழியரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
அல்வெலோ பீட்சாவை கர்ப்பிணிப் பெண்ணிடம் டெலிவரி செய்தார், அதன் மொத்த மதிப்பு $33 (சுமார் ரூ. 2,800), ஆனால் $50 (சுமார் ரூ. 4,300) தாளை கொடுத்து அதற்கு சில்லறை வழங்கும்படி ஆர்டர் செய்த கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் சேஞ் இல்லாததால் பின்னர் அந்த பெண்ணே சில்லறையாக தேடி அல்வெலோவுக்கு கொடுத்துள்ளார். கடைசியில் அல்வெலோவுக்கு டிப்ஸாக வெறும் 2 டாலர் (சுமார் 171 ரூபாய்) மட்டுமே கிடைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அல்வெலோ 90 நிமிடங்களுக்குப் பிறகு தனது நண்பனுடன் வந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்தி உள்ளார். மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் அல்வேலா கத்தியால் குத்தினார்.
அல்வெலோவுடன் வந்த நண்பன் கையில் துப்பாக்கியோடு மோட்டலில் பெண்ணின் காதலன் மட்டும் 5 வயது ,மகளை மிரட்டி உள்ளார்.
இறுதியில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பெண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய அல்வெலோவையும் அவரது நண்பரையும் போலீஸ் கைது செய்துள்ளது.