உலகம்
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு
- உடல் நலம் குன்றிய நிலையில் சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரது மைத்துனர் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி. இவர் ஜமாத்-உத்-தவா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஜமாத்-உத்-தவா தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு நிதிமன்றம் ஹபீஸ் அப்துல் ரகுமான் மக்கிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. அப்துல் ரகுமான் மக்கி பாகிஸ்தான் சித்தாந்தத்திற்கு ஆதரவாளர் என பாகிஸ்தான் முதாஹிதா முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
ஐ.நா. 2023-ம் அவரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது. சொத்துகள் முடக்கம், பயணத் தடை ஆகிய தடைகளுக்கு உள்ளானார்.