உலகம்
இங்கிலாந்தில் 2 பெண்கள் குத்திக்கொலை
- அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
- முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து மில்டன் கெய்ன்ஸ் பிளெட்ச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புகுந்த 49 வயது மதிக்கத்தக்கவர் திடீரென கத்திக்குத்தில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வசித்து வந்த 38 வயது மற்றும் 24 வயதுடைய பெண்களை அவர் கத்தியால் குத்திக்கொன்றார். மேலும் சிலரையும் வெறித்தனமாக கத்தியால் குத்தினார்.
இதில் 20 வயது வாலிபர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் ஏன் 2 பெண்களை குத்திக்கொன்றார் என தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.