உலகம்

எல்லாம் உடஞ்சு கெடக்கு.. ஏர் இந்தியாவின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கேபின் வீடியோ - கிழித்தெடுத்த சி.இ.ஓ.

Published On 2024-09-18 15:59 GMT   |   Update On 2024-09-18 15:59 GMT
  • ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையை புக் செய்து அதில் பணித்துள்ளார்.
  • இருக்கை முதற்கொண்டு அனைத்தும் உடைந்த நிலையிலும் பழுதுபட்ட நிலையில் உள்ளன

ஏர் இந்தியாவின் முதல் வகுப்பு கேபின்கள் தரங்கெட்டு இருப்பதாக அதில் இந்திய அமெரிக்க சிஇஓ வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார். CaPatel Investments நிறுவனத்தின் சிஇஓ அனிப் படேல் அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டெல்லிக்கு  வந்த ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையை புக் செய்து அதில் பணித்துள்ளார்.

ஆனால் முதல் வகுப்பு கேபின் என்ற போதிலும் அசுத்தமாகவும், மிச்சம் மீது உணவுடன் தட்டுகள் அப்புறப்படுத்தப்படாமலும், இருக்கை முதற்கொண்டு அனைத்தும் உடைந்த நிலையிலும் பழுதுபட்ட நிலையிலும் இருப்பதாக அந்த கேபினை வீடியோ எடுத்து வெளியிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

Similar News