உலகம்
VIDEO: வான் சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய விமானம் - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விமானி

VIDEO: வான் சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய விமானம் - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விமானி

Published On 2025-03-24 12:28 IST   |   Update On 2025-03-24 12:28:00 IST
  • ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.
  • விமானியை மருத்துவமனை அழுத்து செல்ல முற்பட்டனர்.

தென் ஆப்பிரிக்காவின் சால்தானா பகுதியில் விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனுபவம் மிக்க, திறமையான விமானிகள் விமானங்களில் அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு, நிகழ்ச்சியை காண வந்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில், விமான சாகச நிகழ்ச்சியில் சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் கானெல் என்ற விமானி இம்பாலா மார்க் 1 ரக விமானத்தில் உயர பறந்து விமானத்தை சுழற்றினார். அப்போது நிலை தடுமாறிய விமானம் வேகவேகமாக கீழே விழுந்து நொறுங்கியது. இதை கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மீட்பு படையினர் விபத்துக் களத்திற்கு விரைந்து சென்றனர். பிறகு, விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். இதைத் தொடர்ந்து விமானியை மருத்துவமனை அழுத்து செல்ல முற்பட்டனர். எனினும், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.



Tags:    

Similar News