சேலை அணிந்து வளையங்களுடன் வித்தை காட்டிய இளம்பெண்- வீடியோ
- வீடியோ இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் எஷ்னாவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்குள்ள ஈபிள் கோபுரத்தின் பின்னணியில் இளம்பெண் ஒருவர் சேலை அணிந்து கொண்டு வளையங்களை உடலில் சுற்றி வளைத்து 'முக்காலா... முக்காபுலா...' பாடலுக்கு 'ஹூலா ஹூப்' வகை நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'ஹூலா ஹூப்' என்பது இடுப்பை சுற்றி சுழலும் ஒரு பொம்மை வளையம் ஆகும். வீடியோவில் நடனம் ஆடும் பெண் இந்திய கலைஞரான எஷ்னா குட்டி என்பவர் ஆவார். இவர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனவர்.
தற்போது அவரின் இந்த வித்தை வீடியோ இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் எஷ்னாவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.