உலகம்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ- உதவிக்கரம் நீட்டிய கனடா
- அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.
- அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.
வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் 900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
கனடா அரசுக்கு சொந்தமான விமானம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.