உலகம்

காசா குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் - 58 பாலஸ்தீனயர்கள் கொன்றுகுவிப்பு

Published On 2025-03-20 14:46 IST   |   Update On 2025-03-20 14:46:00 IST
  • தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் படைகள், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. மறுப்பக்கம் ஏமனை சேர்ந்த ஹவுதிக்களும் இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், காசா குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் 400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதாகவோ அல்லது பிற தாக்குதல்களை நடத்தியதாகவோ எந்த அறிக்கையும் இல்லை. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடந்த தாக்குதல்களில் ஒன்று, இஸ்ரேலின் எல்லைக்கு அருகிலுள்ள அபாசன் அல்-கபிராவில் வசித்து வந்த அபு டாக்கா குடும்பத்தின் வீட்டைத் தாக்கியது.

இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இதனை அந்த பகுதியின் அருகில் இயங்கி வரும் ஐரோப்பிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News