உலகம்

பாட்டியின் 20 ஆண்டு ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்- வீடியோ வைரல்

Published On 2024-07-06 09:47 IST   |   Update On 2024-07-06 09:47:00 IST
  • இந்திய பெண்கள் அணிந்திருந்த சேலையை போன்று தானும் சேலை அணிய வேண்டும் என ஒல்லியின் பாட்டி நோன்னிசிமா ஆசைப்பட்டுள்ளார்.
  • நோன்னிசிமா மற்றும் குடும்பத்தினர் மீண்டும் இந்தியா வர முடிவு செய்துள்ளனர்.

இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர் சேலை அணிய ஆசைப்பட்ட தனது பாட்டியின் கனவை நிறைவேற்றியது தொடர்பாக பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒல்லி எஸ்ஸி என்ற இத்தாலிய இளம்பெண் சமூக ஊடகங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவரது பாட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் மும்பைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு மாதம் இங்கு தங்கி இருந்த ஒல்லியின் பாட்டி மற்றும் குடும்பத்தினர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்றனர். அப்போது இந்திய பெண்கள் அணிந்திருந்த சேலையை போன்று தானும் சேலை அணிய வேண்டும் என ஒல்லியின் பாட்டி நோன்னிசிமா ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை.

இந்நிலையில் நோன்னிசிமா மற்றும் குடும்பத்தினர் மீண்டும் இந்தியா வர முடிவு செய்துள்ளனர். அப்போது நோன்னிசிமா தனது சேலை கட்டும் ஆசை பற்றி ஒல்லிஎஸ்ஸியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் ஆச்சரியப்பட்டார். பின்னர் தனது பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து அவருக்காக ஒரு அழகான சேலை வாங்கியுள்ளார். அதன் படி ஒல்லி எஸ்ஸி தனது பாட்டிக்கு சேலை கட்டி விடும் காட்சிகளை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Full View
Tags:    

Similar News