உலகம்

பிரேசிலில் பரபரப்பு - பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள்

Published On 2023-01-09 02:26 IST   |   Update On 2023-01-09 02:26:00 IST
  • பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோ ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
  • பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் இன்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News