உலகம்
ஜப்பானில் 10 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்
- தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் நான்கு ரோந்து கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
டோக்கியோ:
ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று மாலையில் காணாமல் போனது. UH-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகாப்டர், மியாகோ தீவு அருகே சென்றபோது ரேடாரில் இருந்து மறைந்தது. இதனால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோந்து கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.