20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்த பெண் பிரபலம்
- டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
- 20 கிலோவுக்கும் மேல எடை கொண்ட இளம் சிவப்பு கவுனை உருவாக்க ஆயிரம் மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களின் விஷேச ஆடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நகைகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகின்றன.
அந்த வகையில் விழாவில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
'கனவு நனவாகும்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் ஒரு அறிமுகமாக காலடி எடுத்து வைத்ததை மிக எதார்த்தமாக உணர்கிறேன். இந்த விழாவுக்காக 20 கிலோவுக்கும் மேல எடை கொண்ட இளம் சிவப்பு கவுனை உருவாக்க ஆயிரம் மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டது. இந்த கவுனை தானே தைத்ததாகவும் கூறி உள்ளார்.