உலகம்
ஜே.டி. வானஸ் மனைவி உஷாவின் கிரீன்லாந்து பயணத்துக்கு எதிர்ப்பு - டிரம்ப் கூறுவது இதுதான்

ஜே.டி. வானஸ் மனைவி உஷாவின் கிரீன்லாந்து பயணத்துக்கு எதிர்ப்பு - டிரம்ப் கூறுவது இதுதான்

Published On 2025-03-25 14:02 IST   |   Update On 2025-03-25 14:02:00 IST
  • கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடும் எதிர்ப்பு.
  • மூன்று பயணமாக கிரீன்லாந்து செல்கிறார்.

டென்மாாக்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் குழு கிரீன்லாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குழுவில் துணை அதிபர் ஜே.டி. வான்சின் மனைவி உஷா வான்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் மார்ச் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை கிரீன்லாந்தில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் கிரீன்லாந்தின் பாரம்பரியத்தையும், அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும் பார்வையிட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கு கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு என்ன வேலை? எங்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதே அவர்களது நோக்கம். இது அராஜகம். அந்த நாட்டின் அரசியல் தலைவரின் மனைவி இங்கு என்ன செய்ய போகிறார் என்றார். இதேபோல் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளின் கிரீன்லாந்து பயணம் குறித்து அதிபர் டிரம்ப் கூறும் போது, "கிரீன்லாந்தை சேர்ந்த நிறைய பேரை நாங்கள் கவனித்து வருகிறோம். அவர்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுவதன் மூலம் ஏதாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கிரீன்லாந்து எதிர்காலத்தில் எங்களுக்கானதாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்," என தெரிவித்தார்.

Tags:    

Similar News