உலகம்
வாழைப்பழத்தால் முகம் கழுவிய உடற்பயிற்சியாளர்

வாழைப்பழத்தால் முகம் கழுவிய உடற்பயிற்சியாளர்

Published On 2025-03-26 08:23 IST   |   Update On 2025-03-26 08:23:00 IST
  • உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்து காட்டுவது அவரது சிறப்பு.
  • வீடியோ காட்சியை 71 கோடியே 20 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

உடற்பயிற்சியாளர் ஒருவர், வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து தண்ணீரில் முகம் கழுவும் வீடியோ சமூக வலைத்தளத்தில் 71 கோடி முறை ரசிக்கப்பட்டு உள்ளது. ஆஷ்டன் ஹால், உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அமெரிக்க ஆணழகன் ஆவார். அவர் தனது உடற்பயிற்சி மற்றும் பழக்கங்களை வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடுகிறார். அவரை 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்து காட்டுவது அவரது சிறப்பு. அவர் சமீபத்தில் தனது காலை பழக்க வழக்கம் என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் ஒரு கண்ணாடி கோப்பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பிய நீரில் முகத்தை அமிழ்த்தி எடுப்பதுடன், பின்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து கழுவுகிறார். இதனால் முகம் பொலிவு பெறுவதாக அவர் விளக்குகிறார். இந்த வீடியோ காட்சியை 71 கோடியே 20 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News