உலகம்
உக்ரைன் போர்: சவுதியில் ரஷிய - அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை.. முடிவெடுப்பதில் தொடர் தடங்கல்

உக்ரைன் போர்: சவுதியில் ரஷிய - அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை.. முடிவெடுப்பதில் தொடர் தடங்கல்

Published On 2025-03-25 16:08 IST   |   Update On 2025-03-25 16:08:00 IST
  • போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
  • உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது.

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இறுதி முடிவை ஈட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷியா - உக்ரைன் இரு தரப்பும் டிரோன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து ரஷியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு நாள் முன்னதாக உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று தனியே ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

மின்சக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலில் முழுமையாக நிறுத்த அமெரிக்கா வலியறுத்தி உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரயில்வே மற்றும் துறைமுகங்கள் பாதுகாக்கப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளும் தற்போது மின்சக்தி உள்ளிட்ட உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது. எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News