உலகம்
சைபீரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
- அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரஷியாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்தாய் குடியரசில் இன்று (சனிக்கிழமை) காலை 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷிய நில அதிர்வு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி காலை 8:48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எனவே பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த பிராந்தியத்தின் தலைவர் ஆண்ட்ரி துர்ச்சக் தெரிவித்தார்.