உக்ரைனின் கனிம வளங்கள் மீதான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க ஜெலன்ஸ்கி மறுப்பு
- ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- ஜெர்மனியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிகாரிகள் உடன் சந்தித்து பேசியுள்ளார்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
நான் அதிபர் ஆனால் ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் உடன் தொலைபேசியின் வாயிலாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், உக்ரைனின் 50% கனிம வளங்கள் மீதான உரிமையை வழங்க வேண்டுமென உக்ரைனிடம் அமெரிக்க அரசு வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்ற அமெரிக்க அதிகாரிகள் உடனான சந்திப்பில் இது தொடர்பான ஒப்பந்தத்தை சரியாக படிக்கக்கூட விடாமல் அதில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஜெலென்ஸ்கி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.